கீ. வீரமணி - ரங்கராஜ் பாண்டே விவாதமும் சில கேள்விகளும் !!
வணக்கம் நண்பர்களே !!
கடந்த ஞாயிறு இரவு ஒளிபரப்பான கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியைப் பார்த்தவர்களில் நானும் ஒருவன். நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிதான் இது. திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களின் மீதும் மிகுந்த மரியாதையும் மதிப்பும் உண்டு. ஏனோ சென்ற இரண்டு மூன்று வாரங்களா வரும் விவாதங்கள் சிறு சலசலப்பை ஏற்படுத்துகின்றன. திரு. வீரமணி அவர்களுடான விவாதம் எனக்கு சற்று ஏமாற்றமே.. நீ ஏன் வீரமணிக்கு வக்காலத்து வாங்குற ?
நீ என்ன பெரியார்க்குப் பேரனா ? கழகப் போர்வாளா ? மழுங்கின கத்தியா ? அப்பிடினுலாம் யாரும் கேக்காதிங்க..சிறு வயதில் இருந்தே பெரியார்
தொண்டர்களுடனான நட்பு, பெரியார் திடல் எதிரில் கல்லூரி, சென்னை பல்கலை கழகத்தில் முதுகலை தமிழ் படிக்கும் படிக்கும் போது சிறப்புத் தாளாக பெரியாரியியல் படிப்பு, எல்லாவற்றுக்கும் மேல் பெரியார் மேல் இருக்கும் மதிப்பும், மரியாதையும்.. தமிழ் சமுதாயத்திற்க்கு மாபெரும் பணி பெரியார் அவர்களால் மட்டுமே செய்யப்பட்டது என உறுதியாக நம்புகிறவன் நான்.. அதுனாலதான் இந்தப் பதிவு. இதுக்கும் மேல நீங்க காரணம் கேட்டா கேரள மாந்திரீக முறையில் பில்லி சூனியம் வைக்கப்படும் :)
அதைவிட பெரிய வருத்தம் என்னவென்றால் சமூக வலைத்தளங்களில் இது பெரியத் தீனியாகிவிட்டது. அவன் அவன் பெரியாரைப் பற்றியும், வீரமணியைப் பற்றியும் தூற்ற ஆரம்பித்துவிட்டனர்.. வீரமணி அவர்களின் செயல்பாடுகள் குறித்து எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்ததாலும் இந்தப் பதிவுக்கு அவர் எந்த விதத்திலும் காரணம் அல்ல. என் விருப்பம் இந்த விவாதம் நடுநிலையோடு நடைபெற்று இருக்க வேண்டும் என்பதுதான். வீரமணியைத் திட்டமிட்டு கோபப்படுத்தி சரியான பதில்களைக் கூற விடவில்லை என்பதுதான் என் எண்ணம்.
1. எல்லாரும் வைசியரா ??
காட்சியைப் பாருங்கள். திரு. பாண்டே அவர்கள் இன்று எல்லாரும் வைசியர் ஆகிவிட்டனர் என்கிறார். இன்று எல்லோரும் கணிப்பொறி படிப்பத்தால் வைசியர் ஆகிவிட்டோமா ? அப்புறம் ஏன் இன்னும் ஒரு பிரிவினர் மட்டுமே துப்புறவு தொழிலில் இருக்கின்றனர்.? அதை வசதியாக மறந்து/மறைத்து விட்டார்.
2. பாம்பு/பார்ப்பனர் யாரை அடிக்கச் சொன்னார் ?
நடமாடும் சுகந்திரமே இல்லை என்ற கருத்திற்கு துணையாக இதை மேற்கோள் காட்டினார். அதற்க்கு வீரமணி அவர்கள் அது ஒரு வட இந்தியப் பழமொழி என்றும் ஆனால் பெரியார் அதை எங்குமே எழுத வில்லை , குடியரசு, விடுதலை இதில் எங்கேயாவது குறிப்பிடப்பட்டு இருந்தால் பதவி விலகுவதாகக் கூறினார். அதற்க்கு ஆதாராமாகக் காண்பித்தவை எவையும் குடியரசு/விடுதலை இல்லை. எனவே வீரமணி பதவி விலகவேண்டியது இல்லை (சமுக வலைத்தளக் கோரிக்கைகள்) எனவே நான் கருதுகிறேன். ஆனால் இதைப் பெரியார் சொன்னாரா எனக் கேட்டால் நான் ஆம் என்றே சொல்லுவேன். சொன்ன இடம், பொருள், காரணம் வேறு ஏதேனும் இருக்கலாம். சாகும் வரை நண்பனாக இருந்த ஆச்சாரியாரை அவர் அடித்தாரா ? இல்லை வேறு யாரை அடித்தார்? ஆனால் பெரியாரின் கூட்டத்தில் பாம்பை விட்டு கலவரம் ஏற்படுத்திய வரலாறு உண்டு.
3. தமிழகத்தில் ஏன் வைக்கம் போல போராடவில்லை ?
வைக்கம் சென்று ஆலய நுழைவுப் போராட்டம் நடத்திய பெரியார் ஏன் தமிழ்நாட்டில் நடத்தவில்லை என ஒரு கேள்வி ? என்னைப் பொறுத்தவரை இது ஒன்றுதான் இந்த விவாதத்திற்கு தேவையில்லாத கேள்வி. தமிழ்நாட்டில் வைக்கம் போன்று நூறு மடங்கு பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார் அவர். அவர் ஒன்றும் செய்யவில்லை என்றால் இன்று வீரமணியே இல்லை. விவாதமும் இல்லை.
4. பெரியார் vs இராமசாமி நாயக்கர்
இந்தக் கேள்விலதான் மரியாதை மல்லலாகப் படுத்துருச்சு Mr.பாண்டே. பெரியார் 45 வயது வரை நாயக்கர் என்ற அடைமொழியைப் பயன்படுத்தினார். யாரும் மறுக்கப் போவது இல்லை. ஆச்சாரியார் இராஜாஜி அவர் சாகும் வரை பெரியாரை நாயக்கர் என்றுதான் அழைத்தார். செங்கல்ப்பட்டு மாநாட்டில் எடுக்கப்பட்ட அந்தத் தீர்மானம்தான் இன்றுவரை ஜாதிப் பெயரை பெயரோடு சேர்ப்பது கேவலம் என்று என்ன வைக்கிறது தமிழனை. மற்ற மாநிலங்களுக்கும்,பெரியாரின் தமிழ்நாட்டிற்கும் அதுதான் வேறுபாடு.
5.அம்பேத்கர் என்ன சொன்னார் ?
இதுவும் தவறான ஆதாரம் காட்டப்பட்ட ஒரு கேள்வி. அவர் கூறியது அம்பேத்கர் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என்று கூறினார். அனால் காட்டியது "இறந்த விலங்குகளின் இறைச்சியை உண்ணக் கூடாது". More like புலால் உண்ணாமை. மறுப்பே தேவையில்லை இதுக்கு.
இன்னும் சிலவற்றை மேற்கோள் காட்டத் தேவை இல்லையென்றே நினைக்கிறேன். பெரும்பாலும் வீரமணி அவர்கள் சரியாகவே பேசினார். சிலவற்றை இன்னும் ஆதாரத்தோடு அவர் கூறியிருக்கக் கூடும். இன்னும் ஒரு முறை இதே விவாதம் வரவேண்டும். பெரியாரின் பாதையில் தி.க. எப்பிடிப் பயணிக்கிறது என்று பேசலாம். பாண்டே அவர்கள் இன்னும் நல்ல கேள்விகளைக் கேட்க்கலாம். முயற்சி செய்யுங்கள் திரு.பாண்டே.
நன்றி,
ஆசிப்

No comments:
Post a Comment