Thursday, December 18, 2014

s/o மகாலட்சுமி

ஈஸ்வரும் , மகாலட்சுமியும் காதல் திருமணம் புரிந்தவர்கள். திருமண வாழ்வு அன்பு நிறைந்ததாய், காதல் மிக்கதாய் போய் கொண்டு இருந்தது. அந்த காதலின் அடையாளமாய் அவர்களுக்கு குமரன் பிறக்கிறான். ஈஸ்வர் ஒரு குத்து சண்டைவீரன். குத்து சண்டை போட்டிகளில் கலந்து கொள்ள அடிக்கடி வெளியூர் சென்று வந்தான். அங்கு ஒரு பெண்ணைச் சந்திக்குறான் அவளுடன் காதலில் விழுகிறான். அவள் பெயர் சனனி. காதலில் "கை" தேர்ந்தவள்.

கொஞ்சம் கொஞ்சமாய் மகாலட்சுமியையும், குமாரனையும் ஈஸ்வர் மறந்து விட்டு சனனியின் மயக்கத்தில்லேயே இருந்து விடுகிறான். ஆண்டுகள் பல ஆகி விட்டது ; ஒரு நாள் கடைத் தெருவில் ஈஸ்வர் ஒரு சிறுவனைப் பார்க்கிறான். அவனின் முகம் ரொம்ப பார்த்த முகமாக இருக்கிறது ; அவனின் குணங்கள் அவனை ஈர்க்கின்றன ; யார் இவன் என்று யோசிக்கிறான் ; பேரனைப் பார்த்த "சக்தி வேல் கவுண்டரை" போல இருந்தவனுக்கு, அது அவன் மகன் குமரன் எனத் தெரியவர அவனை எடுத்து அணைத்து கொஞ்சுகிறான் ; அத்தனை ஆண்டுகள் காலம் தேக்கி வைத்திருந்த பாசம் பீறிட்டு வெளிவருகிறது ;



சனனி நியாபகம் வந்தததும் குமரனை விட்டுட்டு அவள் வீட்டுக்கு போகிறான் ; அதற்குள் யாரோ ஒருவன் சனனியிடம் ஈஸ்வர் குமரனை கொஞ்சியதை போட்டுக் கொடுத்து விடுகிறனர் ; சனனி கோவத்துடன் காத்த ஆரம்பிக்கிறாள் ; இன்னிக்கு நீ ஊருக்கு முன்னால அவனை கொஞ்சிச்சுட்டு வந்துருக்க ; நாளைக்கு அவன் உன்ன பாத்துட்டு நீ வேணும்னு ஆழுவான் ; ஊரு முழுக்க நீதான் அவன் தகப்பன் என்று தெரிந்து விடும் ; அவனுக்கு ஒன்று எனில் இனிமேல் நீ அங்கபோய் விடுவ; நீ பேசாம உன் மனைவியுடனே (மகாலட்சுமி) போய் இருந்துக்க ; இனி நான் உனக்கு தேவை இல்லை ; என்னோட உறவும் தேவை இல்ல ; நான் உன் நினைவிலேயே என் வாழ்க்கையை கழித்து விடுவேனனு சண்டை போடுகிறாள் ;


கதை முடிஞ்சு போச்சு ; பாட்டைப் பாக்கலாம் :))


"வெண் தலைக் குருகின் மென் பறை விளிக்குரல்
நீள் வயல் நண்ணி இமிழும் ஊர!
எம் இவண் நல்குதல் அரிது,
நும் மனை மடந்தையொடு தலைப் பெய்தீமே!"

நூல்: ஐங்குறுநூறு (#86)
பாடியவர்: ஓரம்போகியார்
திணை : மருதம் 

ஈஸ்வர் = தலைவன் ; மகாலட்சுமி = தலைவி ; சனனி = பரத்தை ; அவ்ளவுதான் ;

பொருள் :
வெண்மையான தலையை உடைய குருகு(ஒரு வகைக் கொக்கு)க் குஞ்சுகள் தம் கூட்டில் இருந்தபடி மெல்ல மேலே எழுந்து பறக்க முயற்சி செய்யும். அப்போது அவை எழுப்புகிற சத்தம் வயல் வெளிகளிலெல்லாம் ஒலிக்கும்.
அப்படிப்பட்ட ஊரின் தலைவனே, இப்போது உனக்கு உன் மகன் முக்கியமாகிவிட்டான். இனிமேல் நீ என்னோடு தங்கமாட்டாய். போ, அப்படியே போய் உன்னுடைய மனைவியுடன் சேர்ந்து சந்தோஷமாக இரு!

நன்றி !!

ஆசிப்

No comments:

Post a Comment